கலையுலகில் கலைவருணண்

1,015

கலையுலகில் கலைவருணண்

மூத்த மொழியாம் முத்தமிழை
முடி சூட்ட கலைநிலவாய் கருத்தரித்த
காவியக் கலைஞன்
கதிரொளியாம் கலைக்குரிசில்

கன்னித் தமிழால்
கலைமகள் புகழ் பாடி
தொன்மைக் கூத்தால்
தென்மாங்கு பாட்டிசைத்து

நானிலமெங்கும்
நாடியே சென்று
நாடகத்துறை வளர
நாவசைத்த பாவலன்

கலைக்குரிசிலின்
கவிதை விளைச்சலில்
கனன்றெழுந்த விதைகள் விழுதுகள்
ஆல் போல் திகழ்கின்றன

வாழையடி வாழையென
வழிவந்த முத்து ஒன்று
சவிரிமுத்து அண்ணாவியார்
வாரிசாய் திகழ்கின்றார்

நடிகனாய் புலவனாய்
நல்லதோர் நெறியாளனாய்
நாடக அர்ப்பணிப்பால்
நாடறிந்த கலைஞனாய்

பாரம்பரிய கலையை சமூகத்தின்
பயன் பாட்டுக் குரியதாக்க
தாயக மக்களுந்தன்
தன்னார்வ தொண்டு கண்டு

கலைத்தென்றல் பட்டமுடன்
கலைவேந்தன் விருதளித்தும்
பொன்னாடை போர்த்தி
பெருவிழா கண்டனரே

புலம் பெயர் நோர்வேயில்
புதிய தலைமுறை மாணவர்க்கு
புகட்டிய கலை நெறியால்
கலைவருணனென தமிழ்ச்சங்க விருது பெற்று

மண்ணின் உருவாக்கத்தில்
மரியாதைக் குரியவராய்
கட்டளைகாரர், குத்தகை காரனெனும்
கருத்துற சமூக சேவையாளனாயும்

வாழ்நாள் கலை சாதனைக்காய்
வட மாகாண முதல்வர் விருதும்
பண்பாட்டு பெருவிழாவில்
யாழ் முத்து பட்டயமும்

இலங்கை அரசாங்கத்தின் கலா பூஜணம் விருது – 2017

இலங்கை அரசாங்கத்தின்
இணையற்ற விருதான
கலா பூஜணம் எனும் உயரிய
அரச அங்கிகாரம் பெற்றபோது

காலனும் கவர்ந்து
கண்மூடி தூங்குகையில்
கடப்பாடுடை நிகழ்வில்
கிறிஸ்துராசா கலைக்குரிசில் மன்றம்

கலாசமூத்திரம் விருதை
கலைப் பாதங்களில் அர்ப்பணிக்க
கலா கங்கை விருதை நோர்வே
உயிர்மெய், கலைப்பாலம் காணிக்கையாக்கிடவே

இறவாப் புகழுடன்
இணையற்ற கலைஞனாய்
சாகாவரம் பெற்று
சரித்திர மானீர்கள்

காலங்கள் கடந்தும் உங்கள்
கலைப்பயணம் தொடரும்

கலைக்குரிசில் கலாமன்றம்
சர்வதேச ஒன்றியம்