சுதந்திரமும் முரண்பாடுகளும் – முழு கூத்து

1,976

பிரான்ஸ் TTN தமிழ் ஒளி கலையகம் தயாரிப்பில் கலைகுருசில் கலாமன்ற கலைஞர்கள் பங்கேற்பில்

சுதந்திரமும் முரண்பாடுகளும் தென்மோடி கூத்து

ஆக்கம்: அண்ணாவியார் ச.மிக்கேல்தாஸ்

இயக்கம்: சூ.றொபின்சன்

கலைஞர்கள் கட்டியக்காரன் —

கோனேஷ் தகப்பன்- பாவலர் அ. அன்ரன் (பாசையூர்) தாய் – றொ.விஜிதா மகன்- சூ. றொபின்சன் நண்பன்- ஜூட் அணித்தலைவர்- றொ. வவா அணி நண்பன்- கோனேஷ் தாளம்- க. றொ றோட்டிக்கோ மிருதங்கம்- மி. றொபின் ஆர்மோனியம்- ஜோ. நடேஸ் ஒப்பனையாளர்கள்- ஞா. டேவிட், ப. அகஸ்டின் பின்னணி கலைஞர்களுடன்- செ. குயின்ரன்

தமிழினத்தின் தேசியக்கலையாம் கூத்து மரபு நீண்ட கால பாரம்பரியத்தைக் கொண்டது. எம்முன்னோர்கள் தமக்கே உரிய தனித்துவமான கலையாக வடிவமைத்துள்ளனர். தாயின் தாலாட்டில் தொடங்கி மூதாட்டி பருவம் வரை விதைப்பு காலத்திலிருந்து அரிவு வெட்டும் வரை கடலோடி பிலால் பிடித்து கரை சேரும் வரை கற்பக பனைத் தாயின் மடியேறி களை போக்கும் பதநீர் பறிக்கும் வரை காதலும் களவுணர்வுமாய் கலந்துறவாடி கட்டையில் போகும்வரை வென்றவனை கொண்டாடி தோற்றவனை தெம்பூட்டும் வரை எல்லா கோலங்களுக்கும் கானமாய் கூத்துக்கலை இருந்தது. விரைவில் ஒளி பரப்பாகும் இக்கூத்து எமது தாயக புலம் பெயர் சமூகத்தில் நிலவும் சுதந்திரமும் முரண்பாடுகளுக்குமான உள்கிடக்கையை உள்வாங்கி அதிகாரத்தை ஆணவத்தை சோகத்தை குமுறும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை தென்மோடி கூத்தாக கலை மரபு கலையாது பிறழ்வு இன்றி வெளிச்சமிட TTN தமிழ் ஓளி தொலைக்காட்சியின் கலையக ஒளிச்சுருளில் பதிவாகி விரைவில் தொலைக்காட்சியில் அரங்கேற இருக்கிறது.

ஒளிப்பதிவு நாள் — பங்குனி 9/2014 , ஞாயிறு