அமரர் கலாபூசணம் பத்திநாதர் சைமன் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி

0 325

அமரர் கலாபூசணம்  பத்திநாதர் சைமன் அவர்களுக்கு  கண்ணீர் அஞ்சலி

கலைக்குருசில் கலாமன்றம் சர்வதேச ஒன்றியம்

saimon

 

மெலிஞ்சிமுனை கிராம வரலாற்றை பதிவு செய்யும் எவரும் அமரர் ப.சைமன் அவர்களின் சேவைகளை பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது.

அக்காலத்தில் இருதயராசா சன சமூக நிலையம், கடற்றொழிலாளர் கூ.சங்கம், கோவில் சபை,  கிராம முன்னேற்ற சங்கம் என கிராமத்தின் தொண்டாற்று  அமைப்புகள் அனைத்திலும் தலைவர், செயலாளர் எனும் முக்கிய பொறுப்புகளில் சமூக நோக்குடன் அன்றைய இளைஞர்களுடன் சேர்ந்து மன உறுதி குலையாது இலட்சிய வேட்க்கையுடன் கிராமம் வளர்ச்சியுற பணியாற்றிய பெருமகன். சமூகத்தின் துயர் துடைக்க பல திட்டங்களை வகுத்தவர்.

saimon 3saimon2

 

பொது நல சேவையுடன் கலையுலகில் எமது பண் பாட்டு விழுமியங்களுடன் பெருமைகளை வெளிபடுத்துவதிலும் ஒரு சிறப்பு மிக்க மக்கள் கலைஞானகத் திகழ்ந்துள்ளார் அன்னாரின் கலை பணியை கவுரவித்து தீவக கலை பிரிவினரால் “கலை விழுது” விருதும் கலைக்குருசில் கலாமன்றத்தினரால் “வாழ் நாள் சாதனையாளர்” விருதும் இலங்கை மத்திய அரசாங்கத்தின் “கலாபூசணம்”  விருதும் பெற பட்ட பெருமைக்குரியவர்

பிரிவால் துயருறும் குடும்பத்தினருடன் சேர்ந்து அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறோம்

கலைக்குருசில் கலாமன்றம் சர்வதேச ஒன்றியம்
5-10-2017

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.