தமிழக தலைநகரில் கனடா ஈழத் தமிழரின் மாவீரன் பண்டார வன்னியன் – கண்ணகி நாட்டுக் கூத்து நூல் வெளியீட்டு விழா

0 72

ஈழதேசத்தின் மிகத் தொன்மையான கூத்துக் கலைகளில் சுடர்மிகு இரு விழிகளாகத் திகழ்பவை தென்மோடிக் கூத்து. வடமோடிக்கூத்து ஆகியனவாகும்.

தென்மோடிக்கூத்தின் பீஸ்மராக தனித்துவம் மிக்க அண்ணாவியாராக திகழ்பவர் அமரர் கலைக்குரிசில் நீ.வ. அந்தோனி அவர்களாவர்.

அவரின் மறைவிற்குப் பின் அவரின் மகன் கலைவருணன் சவிரிமுத்து அவர்கள் அண்ணாவியாராகப் பணியாற்றி வருகின்றார். இவர்களின் மூன்றாம் வழி அண்ணாவியாராக ச.மிக்கேல்தாஸ் 90 களிலிருந்து பல, பல கூத்துப் பிரதிகளை உருவாக்கிப் புலம்பெயர் தேசங்களின் கலைஞர்களை ஒருங்கிணைத்து அரங்காற்றுப் பணியை முழு நேர ஊழியமாகச் செய்து வருகின்றார்.

இவரின் கண்ணகி கூத்து 24.08.1996 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற ஆறாவது உலகத் தமிழர் பண்பாட்டு மகாநாட்டில் சிறப்பு நிகழ்வாக மேடையேற்றப்பட்டது.

தமிழரின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின், தமிழரின் மற மேம்பாட்டினையும் தமிழ் ஆட்சியமைப்பின் உறுதிப்பாட்டினையும் விளங்குகின்றது.

மாவீரன் பண்டாரவன்னியன் வன்னி இராட்சியத்தை ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து காப்பாற்ற வீரம், விவேகம், தியாகம் எனும் சுதந்திர உணர்வோடு வீரத்தை விளைத்த நெஞ்சனாய் இறுதி மூச்சுவரை போராடிய ஈழத்தின் இறுதித் தமிழ் மன்னனின் வீர வரலாற்று வடிவமே நூலுருவில் வெளிவரும் தென்மோடி கூத்தாகும்.

கனடா வாழ் ஈழத்துக் கூத்துக்கலைஞர் அண்ணாவியார் சவரிமுத்து மிக்கேல்தாஸ் அவர்களின் மாவீரன் பண்டாரவன்னியன் – கண்ணகி நாட்டுக்கூத்து நூல் வெளியீட்டு விழா

மாலை 5 : 30 – தமிழ் மரபுக்கலையான பறையிசை
மாலை : 6:00 நிகழ்வுத்தொடக்கம்

வரவேற்புரை – அண்ணாவியார் ச.ஜெயராஜா
தலைமை – பா.ஜெயபிரகாசம் எழுத்தாளர்

நூல் வெளியிடுபவர் – கவிஞர் காசிஆனந்தன்
நூல் பெற்றுக்கொள்பவர் – கவிஞர் இன்குலாப்

வாழ்த்துரை : அருட்தந்தை பா. வீனஸ் செபஸ்ரின்

பேராசிரியர் மு.ராமசாமி (மேனாள் தலைவர் நாடகத்துறை தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம்)

பேராசிரியர் அ.மங்கை (நாடகச் செயற்பாட்டாளர்)

திருமிகு ரோகினி (திரைக் கலைஞர் – இயக்குநர்)

பேராசிரியர் பார்திபராஜா (மாற்று நாடக இயக்கம்)

ஏற்புரை : அண்ணாவியார் சவரிமுத்து மிக்கேல்தாஸ்

மேலதிக தகவல்களுக்கு – kalaikurusil.com / kalaikurusil@gmail.com

kalaikurusil-invitation1-610x862

 

 

Sources  –

TAMILCNN – http://www.tamilcnnlk.com/canada/news/141979.html

You might also like More from author

Leave A Reply

Your email address will not be published.