|
மறைந்த அண்ணாவியார் மரிசால் சிந்தாத்துரை (நாவாந்துறை)
புகழ் பூத்த புலவர் அலைகடல்சூழ் மெலிஞ்சிமுனை நகரதனில் அருங்கவிப்புலவராய் அந்தோனி தான் திகழ்ந்தே கலைகுருசில் பட்டமும் தான் பெற்றே கலைஞனாய் வாழ்ந்திட்டார் இத்தரையில்.
செந்தமிழின் மொழியிலே பாட்டிசைத்து சொந்தமாய் கதைகோர்த்து தாளம் சேர்த்து விந்தையாய் மேடையிலே தான் நடித்தே வியப்புறச் சித்தரித்தார் புகழோங்க.
நாடகமும் நாட்டுக்கூத்தும் தான் புனைந்தே நற்பொருள் இனிதாய் சிந்தமைத்து நாட்டமாய் இயற்றிய வெண்பாவும் நல்லதோர் பெயரெடுத்தார் அண்ணாவி என்றே.
|
Kalaikurusil © 2008 | Privacy Policy